வெள்ளி, 27 டிசம்பர், 2013

வீரமங்கை வரலாறு- பாகம் 1: இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டப் பெண் போராளியின் பிறப்பும் திறமைகளும்

வீரமங்கை வரலாறு- பாகம் 1: இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டப் பெண் போராளியின் பிறப்பும் திறமைகளும்
 
http://thevarism.blogspot.in/2013/12/1.html
 
பாகம் 1:
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார் என்று கேட்டால் ஜான்சி ராணி என்பீர்கள். ஆம் வட ஹிந்திய பாடத்திட்டமும்,
1501800_395004830632680_1018813703_n
ஜீ-தமிழ் தொலைகாட்சியும் நமக்கு அப்படி தான் சொல்லி கொடுத்துள்ளன. ஜான்சி ராணி காலத்துக்கு முன்னரே (கி.பி 1772) தனது ராஜ்யத்தை இழந்து மீண்டும் அடைந்த போராடி வென்ற தமிழச்சி வீர மங்கை வேலு நாச்சியார் ஆவார். அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள்.
  • ஜான்சி ராணி (கி .பி 1835-1858 )காலத்திற்கு முன்னரே வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி வேலு நாச்சியார் 25-12-1796 -இல் வீர மரணமடைந்தார்.
  • ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வெற்றியும் பெற்ற முதல் பெண்மணி.
  • உலகில் வேறு எந்த ராணியும் வேலுநாச்சியார் வீரத்திற்கும் அரசியல் விவேகத்திற்கும் இணை இல்லை.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர்.
  • சிறு வயதிலேயே போர்க்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
  • போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்.
  • ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருந்தவர்.
  • 1790ல் தனது மகள் இறந்த பிறகு வேதனையால் நோய்வாய்பட்டவர் 1796ல் டிசம்பர் 25ல் இறந்தார்.
  • இறக்கும் முன் மருது சகோதரர்களை தனது வாரிசாக அறிவித்து சிவகங்கையை ஒப்படைத்தார்...
1505236_1495293617363165_1724732005_n
வீரத்தமிழச்சி வேலுநாச்சியாரின் வழிவந்த தமிழ்ப் பெண்களே பின்னாளில் இந்திய தேசிய இராணுவத்தின் மகளிர் படைப்பிரிவில் பெருமளவு இடம் பெற்றிருந்தனர் என்பது தமிழருக்கு மேலும் சிறப்பு. நம் தேசத்தந்தை நேதாஜியின் வரலாறு மறக்கப்பட்டதைப் போன்று வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாறும் மறைக்கப் பட்டுள்ளது. இன்று ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாடப்பட வேண்டிய வேலு நாச்சியாரின் புகழ் பல தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பது வேதனையானது. எனவே அவ்வீரப் பெண்மணியின் வரலாற்றை நாம் அனைவரும் அறிய வேண்டும். நேற்று வீரமங்கை வேலுநாச்சியாரின் 217வது நினைவு நாள். இன்னாளையொட்டி இன்று முடல் நமது தளத்தில் மறத்தமிழச்சி வேலு நாச்சியாரின் வரலாற்றைத் தொடராக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ராணி வேலு நாச்சியாரின் வரலாற்றைத் தொகுத்துக் கொடுத்துதவிய நம் சகோதரி செல்வி க.நிவேதா நாச்சியார் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவைத்துக் கொண்டு வீரமங்கையின் வரலாற்றைத் தொடங்குவோம்.
1513250_607926082593852_1927265890_n
இந்திய சுதந்திரப் போராட்டங்களில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் வீரப் போர் புரிந்தனர். அவர்களில் ஒருவராக விளங்கி நாட்டினை மீட்டிட புரவி ஏறி வேலும் வாளும் வீசி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கைதான் வேலுநாச்சியார்.
பிறப்பு: இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள சக்கந்தி ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார்-அரசர் செல்லமுத்து சேதுபதி தம்பதியினர்க்கு 173௦-ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர்தான் வேலுநாச்சியார்.
வீரமும் விவேகமும்: இளமையிலே வீரமும் விவேகமும் நிறைந்து விளங்கியவள்.நூல்கள் பலவற்றை ஆராயும் திறனும் பெற்றிருந்தார்.வீர விளையாட்டுகள் அவரது ரத்த அணுக்களில் உறைந்திருந்தது எனலாம்.
பிடித்த நூல்கள்:::: சங்க இலக்கியங்களும், திருக்குறளும்,சிலப்பதிகாரமும், மகாபாரதமும் இராமாயணமும் மங்கையின் மனதுக்கு மிகவும் பிடித்த நூல்களாக இருந்தன.
பன்மொழித் திறன்: சுந்தரத் தெலுங்கு, நாமணக்கு மலையாளம், களிப்பைத் தரும் கன்னடம், உள்ளத்தை ஈர்க்கும் உருதுமொழி,ஏற்ற மிக்க ஆங்கிலம் போன்ற பல்மொழித் திறன் பெற்றிருந்தார்.மேலும் பிரெஞ்சு நாட்டுப் பாதிரியார் ஜோஸ்-டி.பிரே என்பவர் வேலுநாச்சியாருக்குப் பிரெஞ்சு மொழியின் பெருமைகளை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
-வீரம் தொடரும்…

1 கருத்து: