வெள்ளி, 27 டிசம்பர், 2013

"காம்ரேட்" (COMRADE), ஸ்ரீ தேவரின் இறைவரலாற்றைக் கூறும் மற்றொரு ஆவணப் படம்

"காம்ரேட்" (COMRADE), ஸ்ரீ தேவரின் இறைவரலாற்றைக் கூறும் மற்றொரு ஆவணப் படம்

http://thevarism.blogspot.in/2013/11/comrade.html

பசும்பொன் தெய்வத்தின் இறை வரலாறு "காம்ரேட்" (COMRADE) என்ற பெயரில் ஆவணப் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை
comrade
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொளிறேன். முன்னதாகவே "பசும்பொன் தேவர் வரலாறு" மற்றும் "பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஆவணப்படம்" என்ற பெயர்களில் பசும்பொன் சாமியின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அவை பிரபலமாகவில்லை, நம்மில் பலர் அவற்றைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் "காம்ரேட்" படத்திற்கும் உருவாகவிருக்கும் "தேவரய்யா" படத்திற்கும் நாம் நமது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிப்பதோடு நமது பாராட்டுக்களையும் அப்படைப்பளிகளுக்கு உரித்தாக்க வேண்டும்...
"காம்ரேட்" ஆவணப் படத்தின் பாடல் மற்றும் பாடல் உருவான விதத்துடன் கூடிய வீடியோ ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. பாடல் மிக அருமை. நாம் செய்ய வேண்டியது: நாம் பாடலைக் கேட்பது மட்டுமின்றி அனைவரும் அதைக் கேட்கச் செய்ய வேண்டும். பகிர வேண்டும்... பரப்ப வேண்டும்...
இது போன்ற முயற்சிகள் தற்போது நாட்டில் சாதிசாயம் பூசப்பட்டு வரும் ஸ்ரீ தேவர் திருமகனின் உண்மை முகம் உலகிற்கு தெரிய உதவும்... அந்த வீடியோ லிங்க்கை கீழே கொடுத்துள்ளேன்... பகிரவும்... பரப்பவும்...
வீடியோவைப் பார்க்க <<<இங்கு கிளிக் செய்யவும்>>>
"காம்ரேட்" படத்தின் தயாரிப்பாளர் திரு. திரவியப் பாண்டியன் அவர்களுக்கும் இயக்குனர் திரு.தினகரன் ஜெய் அவர்களுக்கும் ஒட்டுமொத்த தேவர் பக்தர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
இதை தயாரித்த திரவியபாண்டியன் அவர்களுக்கு நாம் வாழ்த்துக்கள் சொல்லுவோம்…!
திரவியபாண்டியன்: +91 9443830620
-தமிழர்களின் கடவுள் ஸ்ரீ தேவரின் தீவிர பக்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக