இந்தியாவின் சுதந்திரம் திட்டமிட்டு வழங்கப்பட்ட சூழ்ச்சி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது தெளிவாக நமது தளத்தின்
முந்தைய பதிவுகளில் தெளிவாவாக கூறப்பட்டுள்ளது. “அப்படியென்றால் நாம் உண்மையாகக் கொண்டாட வேண்டிய இந்திய சுதந்திர தினம் எந்த நாள்?” என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் எழாமலில்லை. அக்கேள்விக்கான விடையே இப்பதிவு. நேதாஜியை தேசத் தந்தையாகவும் அவர்தம் கொள்கைகளை தேசக் கொள்கைகளாகவும் ஏற்றுக்கொண்ட நாம் உண்மையில் கொண்டாட வேண்டிய சுதந்திர தினம் எந்த நாள்..?
ஆகஸ்ட் 15ம் தேதியை சுதந்திர தினமாக இந்திய அரசு கொண்டாடினாலும் இதற்கு முன்னால் 1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் "இந்தியா விடுதலை பெற்றது" என நேதாஜி அறிவித்து சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29ம் தேதி கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான். இத்தாலி, ஜெர்மெனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. நேதாஜியைத் தலைவராக ஏற்றுக்கொண்ட கொள்கைவாதிகள் யாரும் ஆகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாக ஏற்றுக் கொள்வதில்லை. நேதாஜி தொடங்கிய அரசியல் கட்சியாகிய "ஃபார்வர்டு பிளாக்" ஆகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாகக் கொண்டாடுவதில்லை. பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் இருந்த வரை அக்டோபர் 21ல் "ஆசாத் ஹிந்து சர்க்கார்" கொடியை ஏற்றுவார். அது தான் ஆயுதமேந்திப் போராடிய குழுக்களுக்கு விடுதலை தினம்.
நன்றி: நேதாஜி மாத இதழ்
நீங்கள் இதையும் விரும்பலாம்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக