வெள்ளி, 27 டிசம்பர், 2013

எங்கு தோன்றினோம்..

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தோடு வானோடு முன் தோன்றிய
மூத்த குடியான தமிழ் குடியின் முதுகுடியினர் பிரமலைக்கள்ளர்கள்

நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின்
மனித இனத்தின் பயணம் என்ற திட்டத்தின் கீழ்
மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன்
அவர்களின் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள்
மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூரில்
முக்குளத்தினரின் ஒரு பிரிவான நமது இனத்தை
சேர்ந்த விருமாண்டி ஆண்டித்தேவர் என்பவாரிடம் மரபியியல் ஆய்வு செய்த போது
எம்130 டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது.
இதை ஒத்த மரபணு ஆப்பிரிக்க மக்களிடமும், ஆஸ்திரேலிய அப்ராஜீன்
மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா
போன்ற நாடுகளிலும் எம்130 டி.என்.ஏ இருப்பதாக
Dr. பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார்.
மேலும் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு
முன்பு தென்இந்தியாவில் நமது இனம் குடியேறியதாக கூறுகின்றனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர், யூதர்கள்,
அரேபிய பழங்குடியினர் போன்றவர்களிடம்
இருந்த சுன்னத் செய்யும் பழக்கம் நமது சமூகத்திடம் வழக்கத்தில் இருந்தது.
ஆப்பிரிக்காவில் சில பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பழக்கத்தில் இருந்த வளைதடி
(பூமராங்) நமது இனம் மற்றும் புதுக்கோட்டை கள்ளர்களிடமும், வழக்கத்தில் இருந்தது.
அந்தக் காலத்தில் வளரி அல்லது வளைத்தடி என்ற ஆயுதமே கள்ளர்களின்
பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது.
ஒருமுனை கனமாகவும், மறுமுனை இலோசாகவும், கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால்
அல்லது உலோகத்தினால் இக்கருவி செய்யப்படுகிறது.
இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு(முன்னோர்களுக்கு) செய்யும் ஆயுத பூசையில்
(முன்னோர் நினைவு வழிப்பாட்டில்)வளாரியை காணிக்கையாக வைத்து வழிபடுகின்றனர்.
வளைத்தடியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் வளரி என்ற ஆயுதமாக
முக்குலத்தோர் அனைவரும் போர்களத்தில் 19ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தினர்.
சின்ன மருது வளாரி வீசுவதில் வல்லவர் என்பது சரித்திரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ராமநாதபுரம் சேதுபதிகளின் அரண்மனை இல்லத்தில்
அவர்களுடைய படைகளில் பயன்படுத்திய வளரிகள் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு.
அது என்னவென்றால் நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும்.
நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் மனித இனத்தின் பயணம் என்ற ஆய்வின்
கருத்தான ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல.
பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும்,
ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின்
அடியில் மூழ்கி கிடக்கும் குமரி கண்டமே மனித இனம்.
குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய,
இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் எம்130 டி.என்.ஏ
மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமரி கண்டம் பகுதியில் தோன்றி பரவினர்என்பதை உறுதிபடுத்துகிறது...
http://www.abroadintheyard.com/modern-faces-ancient-migration/#comment-39547
- Maya Devar


http://piramalaikallar.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக