வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஸ்ரீ தேவரின் வ.உ.சி பற்றிய தீர்க்கதரிசனம்–திரு ஆர்.தியாகு

வ.உ.சிதமபரம் பிள்ளை அவர்களைப் பற்றி தெய்வீகத் திருமகனார் ஸ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்கள்
pillai
கூறியது இன்று அப்படியே பழித்துள்ளது. இதை எண்ணும் போது “ஸ்ரீ தேவர் திருமகனார் சத்தியமாக தெய்வமே என்று எண்ணத் தோன்றுகிறது.
பிள்ளை அவர்களைப் பற்றி தேவர்:
தேசியவாதியும் இன்றைய மகரிஷியுமான அரவிந்தகோஷ் அவர்களால் " எனது பிள்ளையவர்கள் எங்கே?" என்று காங்கிரஸ் பந்தலில் கேட்ட காலத்தில், பக்கத்திலிருந்த வட இந்திய முக்கிஸ்தர்கள் " யாரை தேடுகிறீர்கள்?" என்று வினவினார்கள்.அப்பொழுது அவர், "தென்னிந்தியாவின் சிறந்த தேசியவாதியாகிய வ.உ.சிதம்பரம் பிள்ளையைத் தெரியாதா?" என்று பதிலளித்தார்!
voc
நடுவில் அமர்ந்திருப்பவர் வ.உ.சி. வலது ஓரம் அமர்ந்திருப்பவர் தேவர். கீழே வலது ஓரம் அமர்ந்திருப்பவர் காமராஜர்
அந்த தமிழன், அன்று கண்ட கப்பலோட்டும் தொழில் இன்று அவர் பந்து இனத்தை சேர்ந்த மற்றொருவரால் நடத்தப்பட்டு, சர்க்காரின் கவர்னர் - ஜெனரலால் ஒட்டுவிக்கப்பட்டிருக்கிறது. இது நினைவுகாலம்.
வருங்காலமோ சர்க்காராலேயே அக்கம்பெனி நடத்தப்பட்டு, கடற்கரையின் தீபஸ்தம்பத்தில் சிதம்பரம் பிள்ளையவர்களின் சிலை மின்சாரத் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு, செய்கைக் காலமாக மாறும்!
அந்நாள் சமீபத்தில் நன்னாளாக வரும்!
வாழக சிதம்பரம் பிள்ளை நாமம்!
- பசும்பொன் தேவர்,
20.2.1949ல் 'கண்ணகி' இதழில் எழுதியது
இன்றைய நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் என பெயரிடப்பட்டு பிள்ளையவர்கள் சிலையும் மின் தீபங்களால் ஓளிர்கிறது.தேவரின் தீர்க்கதரிசனம்!
நன்றி: திரு ஆர். தியாகு
இது போன்று உங்கள் கட்டுரையும் இவ்வலைத் தளத்தில் இடம் பெற வேண்டுமா…? தங்களது இனம் சார்ந்த, இன வரலாறு சார்ந்த கட்டுரையினை madhiez@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது முழு விவரங்களுடன் அனுப்புங்கள். உங்களது படைப்பின் தன்மை பொறுத்து இவ்வலைத் தளத்தில் பிரசுரிக்கப் படுவதோடு “நேதாஜி” மாத இதழிலிலும் பிரசுரிக்கப் படுவதற்கு பரிந்துரை செய்யப்படும். எங்களுடன் இணையுங்கள்கருதுக்களை பரப்புங்கள்இனப் பெருமை காப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக