திங்கள், 30 டிசம்பர், 2013

கற்பழித்தவர் சாதி பார்க்கக் கூடாது, மதம் பார்க்கக் கூடாது. 


பிரபுகண்ணன் முத்தழகன்

காரைக்காலில் ஒரு சகோதரி பல மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் புரட்சியாளர்களின் குரலில் ஒரு முதிர்ச்சியும் , சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் நோக்கமும் தெளிவாக புலப்படுகிறது. கற்பழித்தவர் சாதி பார்க்கக் கூடாது, மதம் பார்க்கக் கூடாது. இது பொதுவான பிரச்சினை என்றெல்லாம் எனக்கே கண்ணில தண்ணி வர்ற மாதிரி அருமையா சொல்றீங்க. ஆனா உங்க கொஞ்சம் கடந்த காலத்தை நினச்சு பார்க்கிறேன். மேலவளவில கொலைகள் நடந்த போது இதே நிதானமும் பக்குவமும் நீங்க காட்டுனீங்களா?. என்னா ஆவேசம்?. என்னா அட்டகாசம்?. மேலவளவில ஒரு குறிப்பிட்ட வகுப்பு மக்கள் வீடுகளை அடிச்சு நொறுக்கி எல்லாத்தையும் கொள்ளையடிச்ச பின்னாடியும் , அந்த கொலைக்கு சம்பந்தம் இல்லாதவன் , அந்தப் பகுதியில நல்லா இருந்தவன் எல்லாத்தையும் ஆயுள் முழுக்க சிறைக்கு அனுப்பின பின்னாடியும் ஆதிக்க சாதி வெறி ஆதிக்க சாதி வெறின்னு இன்னைக்கு வரைக்கும் அப்பாவி மக்கள் மனசில வன்மத்தை நீங்க வளர்க்கல?. ஒரு பகுதி மக்கள் தும்மினாலே அதை ஆதிக்க சாதியின் சதி அப்படின்னு வரலாறு எழுதும் எவிடன்ஸ் கதிர் மாதிரியான ஆட்கள் இப்போ இவ்வளவு பெரிய கொடுமை நடந்ததை கண்டும் காணாம இருக்கீங்களே?. இதுல உங்களுக்கு மனித உரிமை போராளின்னு பேரு வேற!!! உங்களுக்கு எல்லாம் வெட்கமே கிடையாதாடா?. எவிடன்ஸ் கதிர் மனித உரிமை மீறல் பதிவேட்டில போன வருஷம் நடந்த மதுரை எரிப்பு சம்பவமும், காரைக்காலில நடந்த கொடுமையும் இருக்கணும். அது இல்லாட்டி உன்னோட பொழப்பு மானங் கெட்ட ஈனப் பொழப்புன்னு ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம். இவனுங்கள கூட விடலாம். கூலிக்கும், இன்ன பிற வசதிக்கும் மாரடிக்கிற பத்திரிகை காரனுங்கள மன்னிக்கவே முடியாது. சில காலிப் பயலுக பொண்ணுகளை கேலி பண்றானுங்கன்னு ஆர்வக் கோளாறில எவனோ கட்டின சுவரை உத்தப்புரம் தீண்டாமைச் சுவருன்னு நாடு முழுக்க பரப்பி காசு பாத்த நீங்க காரைக்காலில நடந்தத சம்பவத்த ஏதோ சுற்றுலா செய்தி மாதிரி சொல்றீங்களே. நீங்க நடத்தறது பத்திரிக்கையா இல்லை மஞ்சள் பத்திரிக்கையா?. # வன்மத்தை வளர்க்காதீங்கடா! பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவீங்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக