வெள்ளி, 27 டிசம்பர், 2013

தேவன்” என்றால் யார்?-திரு.மேகநாதன் தேவர்

தேவர் என்றால் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் என்று பொருள். இந்த பெருமை நமக்கு கோட்டை கட்டி அதில் கொடி ஏற்றியதால்
mekan thaevan
கிடைக்கவில்லை. நல்ல செயலாலும், நல்ல எண்ணத்தாலும், நல்ல பண்பாலும், மற்றவருக்கு உதவியதாலும், மற்றவரை காத்ததாலும் தான் இந்த பெருமை கிடைத்தது. ஆளுமை என்பது அடக்குமுறையால் கிடைத்தது இல்லை. அது அரவணைப்பால் மட்டுமே கிடைத்தது. தாழ்த்தப்பட்டவர்களை அடக்கி ஒடுக்கியதால் அவர்கள் நம்மை வணங்கவில்லை. அவர்களை அரவணைத்து காத்ததால் நம்மை அண்டி இருந்தார்கள். அடக்குமுறை அதிகமாகும்போது தான் எதிர்ப்பு அதிகமாகும். அந்த எதிர்ப்புதான் ஒருநாள் வன்முறையாய் வெடிக்கும்.
நம் வரலாற்றில் பெரும்பாலும் தேவன் என்பவன் யாரையும் கெடுத்தது இல்லை. யாரையும் தாழ்த்தியது இல்லை. ஆனால் இன்றோ மற்ற ஜாதியினரை திட்டினால் தான் அவன் உண்மையான தேவனாக நம்மில் தெரிகிறான். நம்முடைய சூழல் நம்மை இப்படி மாற்றிவிட்டது. ஜாதி துவேசத்தால் நமக்கு வீழ்ச்சிதானே தவிர அதனால் பயன் இல்லை. ஒரு சாதியை அடக்கி ஒடுக்க என்ன செய்யலாம் என்று சிந்திப்பதை விட நம் இனத்தை எப்படி முன்னேற்றலாம் என்று சிந்திப்பதுதான் நம் இனத்தின் இன்றைய தேவை.
ஆனால் நாம் புத்தனின் வாரிசு இல்லை. மருதநாயகத்தை அடித்து விரட்டிவிட்டு மாபூஸ்கானுக்கு அடைக்கலம் கொடுத்த பூலித்தேவன் வாரிசு. வெள்ளையனை விரட்டிவிட்டு ஊமைத்துரையை காப்பாற்றிய மருது பாண்டியர்கள் வாரிசு. அன்புக்கு அன்பு அடிக்கு அடி. இதுதான் நம் தேவர் இனத்தின் மந்திரம். பத்து பேர் சேர்ந்து ஒருவரை தாக்குவது வீரம் இல்லை. ஒத்தைக்கு ஒத்தை நிற்ப்பவன் தான் வீரன். வீரம் என்பதே நம்மிடம் இருக்கு பயத்தை மறைப்பதுதான். உடல் பலம் உள்ளவன் எல்லாம் வீரன் இல்லை. மனபலம் உள்ளவன் எல்லாம் கோழையும் இல்லை.
தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்வதை விட புண்ணியம் எது தெரியுமா ?. அங்கு ஏன் செல்கிறோம் எதற்கு செல்கிறோம் என்று தெரிந்துக்கொள்வதுதான். தேவர் அய்யாவை வணங்குவதை விட புண்ணியம் எது தெரியுமா ??. அவரை பின்பற்றுவதுதான். மஞ்சள் துணியை நெற்றியில் கட்டிக்கொண்டு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்வதால் தேவர் அய்யா சந்தோசப்படுவாரா ? தலையில் குவாட்டர் பாட்டிலை வைத்துக்கொண்டு ஆயிரம் போலீசார் முன்னாடி பசும்பொன்னில் ஆடுவதை தான் தேவர் அய்யா வீரம் என்றாரா ? அல்லது வாகனத்தின் மேலே உக்கார்ந்து செல்வதைத்தான் விவேகம் என்றாரா ??
தாய் நாட்டின் விடுதலைக்காக படை திரட்டிய தேவர் அய்யாவை வணங்க செல்லும்போது மானமறவர் படையாக செல்லாமல் வானரப்படையாக செல்வதுதான் நமக்கு பெருமையா ?. தாய் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்நாளில் பனிரெண்டு ஆண்டுகள் சிறைவாசம் இருந்த தேவர் அய்யாவின் சிலையை இன்றும் சிறைக்குள் வைக்க யார் காரணம் ? தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்க்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தேவர் அய்யாவின் சிலையை தாழ்த்தப்பட்டவர்கள் அகற்ற சொல்வதேன் ? ஜாதியே இல்லை என்பதை செயலில் வாழ்ந்து காட்டிய தேவர் அய்யாவை தேசிய தலைவரில் இருந்து ஜாதி தலைவர் ஆக்கியதில் நமது பெரும்பங்கு உள்ளதா இல்லையா ?
நாம் யார் நம் முன்னோர்கள் யார், அவர்கள் என்ன செய்தார்கள், நாம் அவர்களுக்கு என்ன செய்தோம், அவர்கள் எப்படி வரலாற்றில் இடம் பிடித்தார்கள், அதை நாம் எப்படி தக்கவைப்பது, அவர்களை போல நாமும் எப்போது வாழ்வது, நம் நிலை என்ன, நம் குடும்ப நிலை என்ன, நம் இனத்தின் நிலை என்ன, இப்போது நமக்கு ஜாதி சண்டை தேவையா அல்லது உள்ப்பிரிவு சண்டை தேவையா, அல்லது நமது முன்னேற்றம் தேவையா ?? என்ற சிந்தனையோடு உங்களோடு நானும் பயணிக்கிறேன்.
-மேகநாதன் முக்குலத்துப் புலி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக