தெய்வீக திருமகனாரின் பொற்பாதங்களை தொட்டு வணங்கி, நல்லாசியோடு என் எழுச்சி வீர வரிகளை ஆரம்பிக்கிறேன்.
தொல்காப்பிய வரலாற்றில் வீரமறத்தியின் மகன் புறமுதுகு பட்டு மாண்டான் என்ற செய்தி கேட்டு தன் பால் கொடுத்த மார்பகத்தையே அறுத்து எரிந்து விடுவேன் என்று வீரமுழக்கம் இட்ட இனம் அல்லவா நம்முடைய தேவர் இனப்பெண்கள்..வீரமும்,ஈகையும் நிறைந்தது நம் முக்குலத்து மண். அன்று முதல் இன்று வரை முக்குலத்து வம்சத்தில் பிறந்த ஆண்,பெண் இருவரும் எல்லா துறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதே வரலாற்று சான்று அதை அனைவரும் வெளிக்கொண்டு வர வேண்டும். தேவர்,நாச்சியார் என்ற சொல்லில் தெய்வீக தன்மை மறைந்து நிறைந்து உள்ளது . வெளிக்கொண்டு வாருங்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் என் உறவான சொந்தங்களே..
முக்குலத்தில் பிறந்தவர்களிடம் ஆற்றலும் அறிவும் தியாக உணர்வும் நிறைந்திருந்தவர்கள்.நம் குலத்தில் பிறந்த பெண்களுக்கு பிறப்பிலே வீரமும் விவேகமும் உண்டு.இதற்கு சான்றாக விளங்கிய தேவர் குலத்தின் தாய் வேலு நாச்சியார் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து பாரத நாட்டில் முதல் முதலில் வீரமுழக்கமிட்ட வீரத்தாய் நாச்சியார் ஆவார். நம் இனத்தில் பிறந்த தேவர் குலத்துபெண்மணிகள் எத்தனை பேர் இந்த வீரமங்கையை அறிவார்கள்.நம் குலத்தில் பிறந்த ஆண்கள் தன் பெயருக்கு பின்னால் தேவர் என்று இணைத்து கொள்வதை போல பெண்கள் ஏன் தன் பெயருக்கு பின்னால் நாச்சியார் என்று இணைக்க ஏன் தயங்கிறார்கள். வளர்ந்து வரும் நாகரிக உலகில் வாயில் நுழையாத பெயரை வைக்கிறார்களே வரலாற்று பெயரை ஏன் தவிர்க்கிறார்கள். இதற்கு காரணம் நம் வரலாறு பலவற்றை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எடுத்து சொல்லாத காரணத்தினால் அறியாமல் இருக்கலாம். இந்த பதிப்பை பார்த்து ஒரு பெண்ணாவது தன் பெயருக்கு பின்னால் நாச்சியார் என்று இணைத்தாலே இந்த பதிப்புக்கு கிடைத்த வெற்றி. விழித்து கொள்ளுங்க என் தேவர் இன தாய் தந்தைகளே... இதே நிலை நிடித்தால் வரலாற்று சரித்திர உண்மைகள் அறியாமல் புதைக்கப்படும் அபாயம் நிலை ஏற்ப்படும்.
நம் இன முன்னேற்ற பாதையில் ஆண்களின் பங்கை விட பெண்களின் பங்கு குறைவாகத்தான் இருக்கிறது.அதற்கு காரணம் அவர்களின் சூழ்நிலைகளில் சமூக இன எழுச்சி இல்லாத காரணம் தான்.இதன் விளைவாக வரலாறு அறியாத நம் இன பெண்கள் வழி தவறி சென்று வேறு சமூகத்தில் மாற்றுத் திருமணம் செய்யும் அபாயத்திற்கு உள்ளாக்கிறார்கள். பெற்றோர்கள் முன்னோர்களின் வரலாற்று வாழ்க்கை முறையை சொல்லிக் கொடுத்தால் தவறாக செல்லும் பாதையை தடுத்து விடலாம்.நம் வரலாற்றை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் எடுத்துரைக்க வேண்டியது நம்முடைய கடமை அல்லவா..பெண்கள் மென்மை ஆனவர்கள் தான் ஆனால் நம் இனப்பெண்களின் இரத்தத்தில் வீரமும் கலந்து உள்ளது புலியை முறத்தால் அடித்த வீரப்பரம்பரையில் பிறந்த பெண்கள் அல்லவா நாம்...? நம் இனத்தின் பெண்களின் முழுஈடுபாடும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து..
இன சமுதயத்தில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்றால் ஆண்களின் ஒத்துழைப்பும் ,முழுசம்மதமும் இருக்க வேண்டும்.பல சூழ்நிலைகளால் ஈடுபட இயலவில்லை என்றாலும் நம் வரலாற்று சரித்திரங்களையும், பெருமைகளையும் பெண்கள் தன் இன உறவுகளிடம் எடுத்துரைப்பது நம் கடமையல்லவா...? தடம்மாறும் வயதான பள்ளி,கல்லூரி பருவத்தில் படிக்கும் போதே வீட்டில் பெற்றோர்க்களாகிய நீங்க நாம் உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த ஆண்களை தேவர்கள் என்றும் பெண்களை நாச்சியார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் எதுவே பெற்றோர்களுக்கு முதற்கடமை. இனி வரும் காலத்தில் தேவர் குல செல்வனை தேவர் என்றும் தேவர் குல செல்வியை நாச்சியார் என்றும் பெயரோடு பதிய வைக்க சபதம் எடுப்போம். என் உறவான சொந்தங்களே என்ன பெயர் வேண்டுமென்றாலும் வைத்து கொள்ளுங்கள் பெயரோடு நாச்சியார் என்று சேர்த்து கொள்ளுங்கள் எதுவே இந்த நாச்சியாரின் அன்பான வேண்டுகோள் ஆகும்.
“செல்லும் பாதையும் வழிநடத்தும் தலைமை பாரம்பரியமும் சரியாக இருந்தால் வெல்வது உறுதி என் தேவர் இனம்”.
-க.நிவேதா நாச்சியார் MBA,MDIM
supper
பதிலளிநீக்கு