வெள்ளி, 27 டிசம்பர், 2013

மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு ஸ்ரீ தேவர், தீரன் சின்னமலை பெயர்களை வைக்கக் கோரி தேசிய சமுதாயக் கூட்டமைப்பு சார்பில் பசும்பொன்னிலிருந்து வாகனப் பயணம்

''மதுரை விமான நிலையத்திற்கு ஸ்ரீ பசும்பொன் தேவர் பெயரையும், கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலை
manikandan copy
பெயரையும் வைக்கவும் நமது பொதுக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய சமுதாயக் கூட்டமைப்பு சார்பில் 54 சமுதாயத் தலைவர்களுடன் பசும்பொன்னிலிருந்து மதுரை வரை டிசம்பர் மாதம் வாகனப் பயணம்'', பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு.
''தேசியத் தலைவர்களான தீரன் சின்னமலை பெயரை கோவை விமான நிலையத்திற்கும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கும் சூட்டக் கோரியும்,வன்கொடுமைச் சட்டம் மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களை பொதுவாக்கக் கோரியும்,சமுதாய இளைஞர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,தேசியத் தலைவர்களை சாதித் தலைவர்களாக்கி அவர்களை வழிபாடும் உரிமையை தடுக்கும் 144 தடை உத்தரவு மூலம் ஜனநாயக விரோதச் செயல்களை செய்வதைக் கண்டித்தும் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை உட்பட 54 சமுதாய மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான ''தேசிய சமுதாயக் கூட்டமைப்பு'' சார்பில் தேசியத் தலைவர் தேவர் பிறந்த பசும் பொன்னிலிருந்து தமிழ் சங்கம் வளர்த்த மதுரை வரைவாகனப் பயணம்
மேற்கொள்ள இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..இந்த பயணம் உணர்வுபூர்வமாக அமைய தேவர் மண்ணில் கருத்து வேறுபாடுகள் மறந்து அமைப்புகளை கடந்து இன உணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன்.
இந்தப் பயணத்தில் யாரிடமும் பணம் பொருள் பதவிக்காக அடிபணியாமல் எதிர்பார்க்காமல் தன் சொந்தச் செலவில் இன உணர்வோடும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் கலந்து கொள்ள விரும்புவர்களை சீருடையுடன் 500 இளைஞர்களைத் தேர்வு செய்ய இருக்கிறோம்.தேவர் சமுதாய இளைஞர்களை அன்புடன் அழைக்கிறேன்.தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
தேசியத் தலைவர் தேவர் ஐயா ஒரு சாதியத் தலைவரல்ல,தேசத்தின் தலைவர் என்பதைப் பாருக்குணர்த்த இப்புனித பயணத்தில் பங்கேற்க அன்போடு அழைக்கிறேன்.
தேசியப் பணியில்,
பொங்கலூர் இரா.மணிகண்டன்
தலைவர்,தேசிய சமுதாயக் கூட்டமைப்பு
கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை
9942455100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக