வெள்ளி, 27 டிசம்பர், 2013

நிலவொளியில் வந்த ஸ்ரீ தேவரின் சூட்சம சரீரம், நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுக்காவில் உள்ளது பத்மநாபமங்கலம் என்னும் கிராமம். அங்கு வல்லநாட்டு சித்தர்
217152_116303281782389_100002081540289_125743_242731_n
ஸ்தாபித்த பசும்பொன் தேவரின் கற்சிலை உள்ளது.ஆண்டுதோறும் அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி அன்று உணவளித்தல் நடக்கும்.அதற்கான வரவு செலவுகளுக்கு ஊர்ப் பொதுவில் நஞ்சை நிலம் வாங்கி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
பசும்பொன் தேவர் கற்சிலை 1979 ஆகஸ்ட் மாதம் செங்கோட்டைலிருந்துசெய்து கொண்டு வரப்பட்டது.ஆகமவிதிப்படி நெல்,நீர் முதலான சாந்தி பொருட்களில் சிலையை ஒரு தொட்டியில் ஊற வைத்திருந்தனர்.அதன் எதிரில் சீனி அம்மாள் என்ற மூதாட்டி இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அன்றும் வழக்கம் போல் வீடு வாசலில் வைத்து இட்லி பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார் சீனி அம்மாள்.அப்போது தொட்டி இருக்கும் இடத்தின் அருகில் உள்ள தெரு வழியாக வேஷ்டி கட்டிய ஆஜானுபாகுவான உருவம் நடந்து வந்து கொண்டிருந்தது.நேரம் அப்போது காலை மூன்று மணி.நிலா வெளிச்சத்தில் அந்த உருவத்தை பார்த்து திடுக்கிட்ட சீனி அம்மாள்,நீங்கள் யார்?இந்த அதிகாலையில் எங்கிருந்து வருகிறீர்கள் ? என்று கேட்டார்.
எனக்கு ஊர் வடக்கே அம்மா. லட்சுமணன்(தேவர் சிலை அமைப்பாளர்) வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தது அந்த உருவம்.அப்படியே நடந்து சென்ற அந்த உருவம் தெருகோடியில் மறைந்து விட்டது. நடந்ததை அனைத்தையும் தன் மகனிடம் அதிர்ச்சியுடன் கூறியிருக்கிறார்.ஏதோ பிரம்மை என்று நினைத்து அவர் மகன்,காலையில் லட்சுமணன் அண்ணனிடம் சொல்லலாம் என்று கூறிவிட்டார்.
ஊற வைக்கபட்டிருந்த தேவர் சிலைக்கு பூஜை செய்ய காலையில் லட்சுமணன் வந்தார்.நடந்ததை அனைத்தையும் விவரித்தார் சீனி அம்மாள்.ஆனால் தன் வீட்டுக்கு அதிகாலையில் யாரும் வரவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
பசும்பொன் தேவரின் சூட்சம சரீரம் தான் அதிகாலையில் நிலவொளியில் பத்மநாதபுரம் வந்தது என்பது பின்னர் அனைவருக்கும் புரிந்தது.இன்றுவரை இச்சம்பவம் அப்பகுதியில் பேசப்படுகிறது.
ஸ்ரீ தேவர் என்பவர் மனிதர் அல்ல தெய்வத்தின் அவதாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக