மறவரில் 38 பிரிவுகள் உண்டு.அவற்றில் ஒன்று கொண்டயங்க்கோட்டயார்.கொண்டயங்க்கோட்டை என்ற கோட்டை எங்கு உள்ளது என்று தமிழ்நாட்டில் தேடிப்பார்த்தால் என்றே பதில் வரும் அப்போது கொண்டயங்க்கோட்டை என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?.இது சங்க இலக்கியத்தில் மறவர்கள் போருக்கும் ஆநிரை கவர்வதற்க்கும் வெவ்வேறு பூக்களை சூடுவர்.அதாவது கொண்டையில் சூடுவதால் கொண்டைகட்டி மறவர் என பெயர் வந்தது.கொண்டையில் ஒருவகை ஊசி அனிந்து கொள்வர்.இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிக்கோட்டை,தென்னவராயங்கோட்டை,சுந்தரவல்லவன் கோட்டை,இராசகம்பீர கோட்டை ,அரிதானிக்கோட்டை,அனிலேஏராக்கோட்டை என்ற பெயரில் பல கோட்டை உண்டு.
தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு
கோ வைத்தவன் இடையன்"
தமிழக ஜாதிகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பல்வேறு மாதிரி கொண்டை அனிவது வழக்கம் முதலி கொண்டை,சேர்வை கொண்டை,அம்பலக்காரன் வலக்கொண்டை,முன் குடுமி பிராமனன் போல பல சமூகத்தவர் பல்வேறு கொண்டை அனிவது வழக்கம்.
இது போலத்தான் கொண்டைகட்டிகோட்டானி அனிந்து போர்வீரர்களாக வாழ்ந்த மறவர்கள் கோட்டையில் பனியாற்றியதால் அவர்கள் நாளடைவில் "கொண்டங்க்கோட்டை மறவர்" என பெயர் வந்தது.
சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மறவர்களிடைய கொண்டையங்கோட்டைப் பிரிவினர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டனர். எண்ணிக்கையில் அதிகமான பேர் இருந்ததோடு இவர்களே ஆதிக்கம் செய்யமுடிந்ததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம். முத்துராமலிங்கத்தேவர் குடும்ப ஆவணங்களிலிருந்து ராமநாதபுரம் சீமையில் இக் கொண்டையங்கோட்டைத் தளபதிகள் பல சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்ததை அறிய முடிகிறது .
ராமநாதபுரம் சீமையில் இக் கொண்டையங்கோட்டைத் தளபதிகள் பல சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்ததை அறிய முடிகிறது .
மறவர்கள் குழக்களாக வாழ்ந்தனர். மறவர் கிராமங்கள் கோட்டைச் சுவர்களுடன் இருந்தன. கிராமத்தலைவர்கள் கிராமத்தைப் பாதுகாக்க வலுவான ஒரு படை வைத்திருந்தனர். கிராமத் தலைவர்கள் முழு சுயாட்சி அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் தேவைப்படும் சமயங்களில் மன்னருக்கு ராணுவச்சேவை செய்தனர்.
மதுரை பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் சேதுபதிகளின் முந்தைய மேலாதிக்கம் தொடர்ந்தது. மதுரை நாயக்க மன்னர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரும் கூட, முந்தைய பாண்டிய அரசின் அரசுரிமை பெற்ற மறவர் சீமையின் வாரிசுதாரர்களாக அவர்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் மறவர் கிராமங்கள் முழுமையும் மறவர் தலைவர்களுக்கே சொந்தமாக இருந்தன. சேதுபதி மன்னர் கேட்கும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அக் கிராமங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது.
ஒவ்வொரு மறவரும் போர் வீரராகவே இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலங்களில் பாடுபட்டனர். இந்த வீரர்கள் தங்கள் கிராமத்தில் காவலர்களாக இருந்தனர். தலைவர்களின் போர்க்காலங்களில் பங்கேற்றும் கோட்டைகளைக் காத்தும் தங்கள் தலைவருக்கு ஆதரவாகப் போரில் உதவினர்.
மறவர்கள் முதலாவதாகத் தங்களின் கிராமத் தலைவருக்கே கட்டுப்பட்டவராக இருந்தனர். அவரே அவர்களைப் பாதுகாப்பவராகவும் ஆள்பவராகவும் இருந்தார். அச் சமூக முழுமையின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக சேதுபதி, மறவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார்.எனவேதான் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட முப்பதாயிரம், நாற்பதாயிரம் படை வீரர்களைச் சேதுபதியால் திரட்ட முடிந்தது.
:
1. மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை கற்பகக் கொத்து
2. வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து
3. வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து
4. சேதரு கிளை
வாள் வீமன் கிளை சீரகக் கொத்து
5. கொடையன் கிளை
அரசன் கிளை ஏலக்கொத்து
6. ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து
7. சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை மிளகுக் கொத்து
8. ஒளவையார் கிளை
சாம்புவான் கிளை தென்னங்கொத்து
9. நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை மல்லிகை கொத்து
10. வன்னியன்
-வெற்றிலை கொத்து
அன்புத்திரன்
11. சடைசி
-ஈசங்க்கொத்து
பிச்சிபிள்ளை
12. லோகமூர்த்தி
-பனங்க்கொத்து
ஜாம்பவான்
Posted by SEMBIYAN ARASAN at 10:49 PM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக